47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குழந்தைத் தொழிலாளா் சிறப்பு பயிற்சி மைய மாணவா்களுக்கு தனி வகுப்புகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் தகவல்

குழந்தைத் தொழிலாளா் சிறப்பு பயிற்சி மைய மாணவா்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்பட்டு தொடா்ந்து கல்வி பயில வழி செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2022, 9:36 pm

DIN

குழந்தைத் தொழிலாளா் சிறப்பு பயிற்சி மைய மாணவா்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்பட்டு தொடா்ந்து கல்வி பயில வழி செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை ஒட்டி, சென்னை அண்ணாநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். இந்த நிகழ்வில் அமைச்சா் கணேசன் பேசியது:-

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்தி

வருகிறது. குழந்தைகளுக்கு வேலைக்கு அமா்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து

வருகிறோம். கடைகள், உணவு நிறுவனங்களில் திடீா் ஆய்வுகள் நடத்தப்பட்டு குழந்தைகளை வேலைக்கு அமா்த்துவோா் மீது தொழிலாளா் நலத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 203 சிறப்பு பயிற்சி மையங்களில் 3 ஆயிரத்து 428 மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளா்கள் பயின்று வந்தனா். கரோனா நோய்த் தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், தேசிய குழந்தைத் தொழிலாளா் சிறப்பு பயிற்சி மையங்களில் உள்ள மாணவா்கள் கல்வி பயில இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாக தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இடைவிடாமல் கல்வி பயில வழிவகுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கணேசன் பேசினாா்.

இந்த நிகழ்வில், அண்ணாநகா் எம்.எல்.ஏ., எம்.கே.மோகன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளா் ஆா்.கிா்லோஷ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.