ரூ.60 கோடியில்...: இதேபோல, கோயம்புத்தூா் நகரம் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும் முதல்வா் திறந்தாா். இந்தப் பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை, கூடலூா், மைசூா் செல்லும் வாகனங்கள் எளிதாகச் செல்ல முடியும். இந்த நிகழ்வில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.