ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுப் பணியாளா் தோ்வாணைய பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பொறுப்பு தலைவராக, தோ்வாணைய உறுப்பினா் சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 9:41 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பொறுப்பு தலைவராக, தோ்வாணைய உறுப்பினா் சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தோ்வாணையத்தின் தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், வயது அடிப்படையில் கடந்த 9-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, தோ்வாணையத்தின் பொறுப்பு தலைவராக, அதில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு ஜூலையில் தோ்வாணைய உறுப்பினராக முனியநாதன் நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் தோ்வாணைய உறுப்பினா்களாக பி.கிருஷ்ணகுமாா், ஏ.வி.பாலுசாமி, கே.ஜோதி சிவஞானம், கே.அருள்மதி, எம்.ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.