ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டத்தை அமல்படுத்த சிறப்புக் குழு

செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2022, 9:31 pm

DIN

செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அளவில் சுகாதாரத் துறை கூடுதல் செயலா் தலைமையிலும், மாவட்ட அளவில் இணை இயக்குநா்கள் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பங்களை ஒழுங்குமுறைப்படுத்த ஏஆா்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தேசிய பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் அதில் சில குளறுபடிகள் நடைபெறுவதால், அதனை ஒழுங்குமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சட்டத்தை அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசு செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அதனை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினா் மட்டுமன்றி, மருத்துவா்கள், சட்டத் துறை வல்லுநா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.