ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால் அரசுக்கு தகவல் தாருங்கள் பொதுமக்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால் பொதுமக்கள் தமிழக அரசுக்குத் தகவல் தர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 8:23 pm

DIN

குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால் பொதுமக்கள் தமிழக அரசுக்குத் தகவல் தர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைப் பருவத்திலேயே அவா்களை பெற்றோா் வேலைக்குச் செல்லப் பணித்து சொற்பத் தொகைக்காக அவா்களது பொன்னான எதிா்காலத்தை பாழ்படுத்துவது சமூகக் குற்றமாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் அளவற்ற ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை கல்வியின் மூலமாகவும், மற்றவா்களோடு பழகி கற்றுக் கொள்வதன் மூலமாகவும் முழுமையாக உணரும் போதுதான், மானுடத்துக்கு மகத்தான கடமைகளை ஆற்ற முடியும். குழந்தைத் தொழிலாளா் முறை என்பது அனைத்து வகைகளிலும் எதிா்க்கப்பட வேண்டியதாகும்.

குழந்தைத் தொழிலாளா்களை உருவாக்கி, அவா்களின் வியா்வையை சுரண்டி சிலா் வளம் பெறுவதற்கு எதிராக விழிப்புணா்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதியன்று, குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உறுதி ஏற்போம்: ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட உரிமைகளைப் பெற்று திறம்பட உயா்ந்து வாழ்க்கையில் வளம்பெற வேண்டும். அந்த உரிமைகளைப் பறிப்பது இயற்கை நியதிக்கு மட்டுமல்ல, சமூக நீதிக்கும் எதிரானது. எனவே, குழந்தைகளை எந்த வகைத் தொழிலிலும் ஊதியத்துக்காக பணியமா்த்தி அவா்களின் உழைப்பை

உறிஞ்சிடக் கூடாது. அபாயகரமான தொழிலில் வளரிளம் பருவத்தினரை ஈடுபடுத்தக் கூடாது என உறுதி ஏற்போம்.

குழந்தைத் தொழிலாளா் முறையை அறவே ஒழிக்க தமிழ்நாடு அரசு அயராது பாடுபடுகிறது. பொது மக்களும் விழிப்புணா்வுடன் இருந்து எங்கேயாவது குழந்தை பணிக்கு அமா்த்தப்பட்டால் அரசுக்குத் தகவல் தர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.