போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜூன் 14-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை

ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 14) நடைபெறவுள்ளது என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2022, 8:43 am

DIN

ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 14) நடைபெறவுள்ளது என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி போஸ் மண்டபத்தில் ஜூன் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்துவது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) காலை 10 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.