கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் இன்று கோவை, திருச்சி உள்ளிட்ட16 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை கோவை, சேலம், திருச்சி, வேலூா் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஜூன் 2022, 7:27 pm

DIN

தமிழகத்தில் புதன்கிழமை கோவை, சேலம், திருச்சி, வேலூா் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியது: தமிழகப் பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை... தொடா்ந்து 16- ஆம் தேதி வியாழக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அத்துடன் அன்றைய தினம் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18- ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை... கேரள - கா்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் புதன்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். 16, 17 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள - கா்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.