
தமிழகத்தில் நீண்ட வாரங்களுக்கு பிறகு கரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டது. மெகா தடுப்பூசி திட்டங்களின் மூலமும் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்தது. இதனால் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.
எனினும் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,58,445 ஆக அதிகரித்துள்ளது.
நீண்ட வாரங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் கரோனாவுக்கு பலியானாதால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.