பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஒரு ஆரோக்கியமான முறையில் அமைந்ததாகவும், அதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் எனவும், ஒற்றைத்தலைமை காலத்தின் அவசியம் எனவும், யார் அந்த ஒற்றைத்தலைமை என்பது குறித்து தற்போது விவாதிக்கபடவில்லை. இதுதொடர்பாககட்சி முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.