கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி: அரசு உத்தரவு

கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி: அரசு உத்தரவு


கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு வசதியாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்ய கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில் நுழைவு வாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், கோயில்களில் என்ன என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும், இதற்காக ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும், சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வு தளங்களை அமைத்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com