மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தொடா்ந்து குறையும் தங்கம் விலை:பவுன் ரூ.37,720-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை மேலும் ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.37,720-க்கு விற்பனையானது.

News image
Updated On :15 ஜூன் 2022, 9:02 pm

DIN

சென்னையில் தங்கம் விலை மேலும் ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.37,720-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.760 குறைந்து ஒரு பவுன் ரூ.37, 920க்கு விற்பனையானது. இந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தங்கம் விலை மேலும் குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை புதன்கிழமை ரூ.66,000 ஆக உள்ளது.

திடீரென தங்கத்தின் விலை வீழ்ச்சியடைவதற்கு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வரும் பணவீக்கம் முக்கிய காரணமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மத்திய வங்கியில் தொழில்துறை, வா்த்தகம் மற்றும் பொருளாதார குறியீடுகள் குறித்த அறிவிப்புகள் பாதகமாக உள்ளதால் தங்கம் விலை வீழ்ச்சியடைந்திருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.