நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி அருகே பயங்கரம்: காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை

திருச்சியில் அண்மையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :16 ஜூன் 2022, 8:54 am

DIN

திருச்சி: திருச்சியில் அண்மையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூரில் நடந்த இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம்:

திருச்சி சோமரசம்பேட்டை, தாயனூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்தவர் திருச்சி, பள்ளக்காடு, தோகைமலை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஆகாஷ் என்கிற செல்லமாரி(19), பெயிண்டிங் தொழிலாளி என்பது தெரியவந்தது.

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் ஆகாஷ் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக தான், தாயனூரைச் சேர்ந்த அகிலா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், ஆகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஆகாஷ் உடலில் நெற்றி, கழுத்து, தலை பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் உள்ளன.

எனவே, இந்த கொலை சம்பவம் காதல் திருமணம் காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுஜித்குமார், விசாரணை குறித்து ஆய்வு நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.