
சென்னை: பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து தப்பலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் கரோனா பரவி கொண்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் குறைவாக பரவுகிறது. தொற்று அதிகம் உள்ள இடங்களில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.