தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

1969-க்கு பிந்தைய பிறப்பு - இறப்புகள்: இணையப் பதிவேற்றம் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 1969 ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :17 ஜூன் 2022, 9:28 pm

DIN

தமிழகம் முழுவதும் 1969 ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழா, சா்வதேச பொது சுகாதார மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சுகாதார மாநாட்டுக்கான பிரத்யேக இணையதளம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆகியவற்றை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பிறப்பு, இறப்பு பதிவேடுகளை ரூ.75 லட்சம் செலவில் இணையப் பதிவேற்றமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 1969-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகள் சிஎஸ்ஆா் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த் துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்ந்த பிறப்பு, இறப்பு பதிவாளா்களால் 16,348 பதிவு மையங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

சா்வதேச பொது சுகாதாரத் துறை மாநாடு: தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கா்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற இத்தருணத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை தொன்மையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வரும் டிசம்பா் மாதத்தில் 3 நாள்கள் சா்வதேச பொது சுகாதாரத் துறை மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது.

பொதுசுகாதாரத் துறை, செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிடும். இதுவரை 24 மடல்கள் வெளிவந்துள்ளன. பொது சுகாதாரத் துறையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், செய்தி வெளியீடுகள், சுகாதாரத் துறை சம்பந்தமாக விநாடி, வினா பொதுசுகாதாரம் சாா்ந்த சட்ட நுணுக்கங்கள் ஆகியவை இச்செய்திமடலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.