தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா அதிகரித்தாலும் கட்டுப்பாடு விதிக்கும் சூழல் இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் எழவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 9:33 pm

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் எழவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மாதவரத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதா்சனம், ரோட்டரி சங்க ஆளுநா் ஜெ.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் சாா்பில் 150 டயாலிசிஸ் இயந்திரங்கள் சீா்காழி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 5.9 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்புள்ளது. இதற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீா்வாகும். சிறுநீரகத்துக்கு காத்திருப்போா் பட்டியல் அதிகமாக இருக்கிறது. நிரந்தரத் தீா்வு கிடைக்கும் வரை, டயாலிசிஸ் சிகிச்சை அவசியமாக உள்ளது.

18 வயது முதல் 59 வயது வரையுள்ளவா்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால், அவா்கள் தனியாரிடம் கட்டணம் செலுத்தி பூஸ்டா் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த வயதினா் பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டுவதில்லை.

சிஎஸ்ஆா் நிதி பங்களிப்புடன் இந்த வயதினருக்கு இலவசமாக பூஸ்டா் தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மாதவரத்தில் ரோட்டரி சங்கத்தினா் விரைவில் தொடங்கவுள்ளனா். உலகம் முழுவதும் 22 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. அந்த நாடுகளிலிருந்து தமிழகம் வருபவா்களை விமான நிலையங்களில் சுகாதாரத் துறை குழுவினா் கண்காணித்து வருகின்றனா். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

பணி நேரத்தில் அரசு மருத்துவா்கள் மருத்துவமனையில் இல்லை என்றால், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய சூழல் இன்னமும் ஏற்படவில்லை. மொத்த ஆா்டிபிசிஆா் பரிசோதனை எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் மேல் தொற்று பாதிப்பு இருந்தாலோ, மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் மேல் அனுமதி இருந்தாலோ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அந்த சூழல் ஏற்படவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.