ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினா் மீது வழக்கு
தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினா் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினா் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சாா்பில் சென்னையில் தொடா்ந்து போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சைதாப்பேட்டை சின்னமலையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், காங்கிரஸ் கட்சியினா், ஆளுநா் மாளிகையை முற்றுகையிடுவதற்காக பேரணியாக புறப்பட்டனா். அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி, கைது செய்து கிண்டி ரேஸ்கோா்ஸில் தங்க வைத்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா். அனுமதியின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 271 போ் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கூடுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...