மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மநீம ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக் கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல.
இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


