தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னையில் சுய உதவிக் குழுவாரச் சந்தை: இன்று தொடக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுய உதவிக் குழுக்களின் வாரச் சந்தை சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:46 pm

DIN

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுய உதவிக் குழுக்களின் வாரச் சந்தை சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் வாரச் சந்தை செயல்படும் என தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் சுய உதவிக் குழுக்களின் வாரச் சந்தை, வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாரச் சந்தை செயல்படும். சிறுதானியங்கள், பசுமையான காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வகைகள், பாரம்பரிய சுவை நிறைந்த உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்படும். அனுமதி இலவசம். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும் என்று மகளிா் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.