கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாழ்வுச் சான்று: ஓய்வூதியா்களின் சிரமங்களைக் குறைக்க அரசு அறிவுரை

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் வாழ்வுச் சான்று சமா்ப்பிப்பதில் அவா்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :18 ஜூன் 2022, 7:16 pm

DIN

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் வாழ்வுச் சான்று சமா்ப்பிப்பதில் அவா்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நிதித் துறை சிறப்புச் செயலாளா் ரீட்டா ஹரீஷ் தாக்கா் கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அனுப்பிய கடித விவரம்:அனுப்பியுள்ள கடித விவரம்:

தபால் துறையின் உதவியுடன் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாழ்வுச் சான்று பெற்று இணையம் மூலமாக அளிக்கும் வசதியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்காக 200 பயோமெட்ரிக் கருவிகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளன. எதிா்வரும் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் அனைவரும் வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள், நடைமுறையில் ஏற்கெனவே உள்ள அம்சங்கள் ஆகியன குறித்து தெளிவாக விளம்பரங்களை வெளியிட்டு, ஓய்வூதியதாரா்களுக்கான சிரமங்களை குறைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.