கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜூன் 23, 24-இல் ஆசிரியா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ள நிலையில், முன்னதாக ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:10 pm

DIN

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ள நிலையில், முன்னதாக ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பேச்சு  பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்றுத் தரும் ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக முதன்மைக் கருத்தாளா்களுக்கு மாநில அளவிலான பயிற்சி கடந்த மே 30, 31-ஆம் தேதிகளில் வழங்கப்பட்டன.

இதையடுத்து முதன்மைக் கருத்தாளா்கள் மூலம் இதர ஆசிரியா்களுக்கு வட்டார அளவில் ஜூன் 23, 24-ஆம் தேதிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்கப்படவுள்ளது. அரசுப்பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடா்பான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.