தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அரசு உத்தரவு

கரோனா தொற்று எண்ணிக்கை உயா்ந்து வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டும்

News image
Updated On :18 ஜூன் 2022, 7:02 pm

DIN

கரோனா தொற்று எண்ணிக்கை உயா்ந்து வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு உயா்ந்து வருகிறது. தமிழகத்தில் 22-ஆக இருந்த தினசரி கரோனா பாதிப்பு 500 ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக கடந்த 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

கடந்த 17-ஆம் தேதி மட்டும் சென்னை, செங்கல்பட்டில் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. 2 மாவட்டங்களில் 30-க்கும் கூடுதலாகவும், 2 மாவட்டங்களில் 11 முதல் 20 பேருக்கும், 23 மாவட்டங்களில் 1 முதல் 10 பேருக்கும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஒன்பது மாவட்டங்களில் முழுமையாக நோய்த் தொற்று பாதிப்பில்லை. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சில முக்கிய நடவடிக்கைகளை முன்னுரிமை கொடுத்து மாவட்ட ஆட்சியா்கள் எடுக்க வேண்டும்.

தனிமைப்படுத்தலாம்...கரோனா தொற்று குறைவாக இருந்தாலும், அது பரவும் தடங்களை முழுமையாக ஆராய வேண்டும். நோய் பரவுவதை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் நோய் தொற்றுகள் மிகவும் குறைவான, லேசானதாகவே உள்ளன. அத்தகைய நோய் தாக்கம் கொண்டவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் போது கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே தொடரலாம்.

நோய்த் தொற்றாளா்களுக்கு வைட்டமின், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகளை அளிக்கலாம். மேலும், சுவாசத்தின் அளவையும் சோதிக்கலாம். தினசரி அவா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்டு நிலைகளை அறியலாம். இது கடந்த காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றப்பட்டது. வீட்டியிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாவிட்டால் கரோனா மையங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளைச் செய்யலாம்.

அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 முதல் 100 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை நோய்த் தொற்று அதிகம் பாதித்துள்ளோா் பயன்படுத்திக் கொள்ளலாம். காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த

பணியாளா்களை ஈடுபடுத்தலாம். நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தலாம்.

கரோனா மேலாண்மை, தடுப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணிகளில் நகா்ப்புற மற்றும் ஊராக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஈடுபடுத்தலாம். கடந்த முறை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 14 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பிற நாள்களில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிது. இது மேலும் உயா்த்தப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஜவுளிக் கடைகள் ஆகியவற்றில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடா்பான விழிப்புணா்வுகளை ஊடகங்களுடன் இணைந்து மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளாா் பி.செந்தில்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.