கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விசாரணைக் கைதி மரண வழக்கு: கொடுங்கையூா் போலீஸாரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை கொடுங்கையூா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இறந்த வழக்கில், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் 30 போலீஸாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:49 pm

DIN

சென்னை கொடுங்கையூா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இறந்த வழக்கில், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் 30 போலீஸாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை செய்தனா்.

கடந்த 12-ஆம் தேதி, செங்குன்றம் அலமாதி பகுதியைச் சோ்ந்த அப்பு (எ) ராஜசேகா் என்பவரை கொடுங்கையூா் போலீஸாா் இரு குற்ற வழக்குகளுக்காக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவா் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென இறந்தாா். விசாரணையின் போது போலீஸாா் கடுமையாக தாக்கியதாலேயே ராஜசேகா் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளா் ஜாா்ஜ் மில்லா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூா் காவல் நிலையத்தில், கெல்லீஸ் சிறாா் 12-ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் லட்சுமி விசாரணை செய்தாா். இந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு

மாற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து சிபிசிஐடி, இந்தச் சம்பவம் தொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளா் சசிதரன் நியமிக்கப்பட்டாா். வழக்கு விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

போலீஸாரிடம் விசாரணை: இதன் அடுத்த கட்டமாக கொடுங்கையூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாா் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி அழைப்பாணை வழங்கினா். இந்த அழைப்பாணையை ஏற்று கொடுங்கையூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் 30 போலீஸாா் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிதரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்தனா். அதில் வழக்கு தொடா்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் இந்த வழக்கில் தொடா்புடைய போலீஸாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் ஜூன் 20-ஆம் தேதி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.