பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு மருத்துவமனையில் அமைச்சா் திடீா் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 9:49 pm

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவா்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் சரிவர கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தாா். மேலும் மருத்துவமனையில் மருந்தகம், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சை நச்சுயியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவு, கட்டண வாா்டு, அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு ஆகியவற்றில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியிலிருந்த மருத்துவா்களை, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சரிவர வழங்கி, மருந்துகள் எந்தவிதக் குறையுமின்றி சரிவர கிடைக்கச் செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.