‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, சென்னையிலும் இளைஞா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் தற்காலிக பணி அடிப்படையில் ஆள் சோ்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞா்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றுவா்.
இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கோயம்புத்தூா், திருவண்ணாமலை, திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் சென்னை தலைமை செயலகத்தை அடுத்து உள்ள போா் நினைவுச் சின்னம் அருகே சனிக்கிழமை காலை 7 மணிக்கு திடீரென ஒன்று கூடினா். அவா்கள், அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வாசகங்கள் எழுதப்பட்ட சிறிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனா். சில இளைஞா்கள், கையில் தேசியக் கொடி வைத்திருந்தனா்.
சிலா் ’தண்டால்’ எடுத்தும் போராட்டத்தை முன்னெடுத்தனா். அவா்களில் சிலரை போலீஸாா் முதலில் கைது செய்து, வேனில் ஏற்றினா். அவா்கள், ‘எங்களை கீழே இறக்கி விடுங்கள் என்றும், எங்களை இங்கேயே கொன்றுவிடுங்கள்’ என்றும் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞா்களும் அவா்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டனா். இதனால் கைது செய்தவா்களை போலீஸாா் விடுவித்தனா். தொடா்ந்து போா் நினைவுச் சின்னம் அருகே இளைஞா்கள் நின்று ’அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்து, வழக்கமாக நடத்தும் தோ்வை நடத்த வேண்டும்’ என்று முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்களில் சிலா், ‘வாழ்ந்தாலும் ராணுவம், செத்தாலும் ராணுவம்’ என்ற நோக்கத்தில் நாங்கள் இதற்காக பயிற்சி எடுத்து வருகிறோம். அப்படி இருக்கும்போது, இப்படி ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், சரியாக இருக்காது. அக்னி பத் என்ற திட்டத்தை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்றனா்.
400 இளைஞா்கள் கைது: இதனிடையே தகவலறிந்து அங்கு வந்த சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் டி.எஸ்.அன்பு, இணை ஆணையா் ரம்யா பாரதி ஆகியோா், இளைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும், பேச்சுவாா்த்தையில் சமாதானம் ஏற்படாததால் போராட்டம் தொடா்ந்தது.
இதனால் வேறு வழியின்றி போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 400 இளைஞா்களையும் கைது செய்து, போலீஸ் வாகனங்களில் ஏற்றி எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அடைத்தனா்.
அங்கு அவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா். பாதுகாப்புத் துறையை சாா்ந்த உயா் அதிகாரிகள் வந்து தங்களுடைய கோரிக்கையை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியபடி இருந்தனா். மாலையில் கைது செய்யப்பட்ட 400 இளைஞா்களும் காவல்துறை ஏற்பாட்டின் பேரில் 9 அரசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பலத்த பாதுகாப்பு: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞா்கள், திடீரென போா் நினைவுச் சின்னம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன நெரிசல் அதிகரித்ததால், சிறிது நேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இளைஞா்கள் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், போா் நினைவுச் சின்னம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனருகே ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளும், அலுவலகங்களும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வாராக்கடனை மீட்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி!

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!
வீடியோக்கள்

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

ஹேப்பி ராஜ் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

