மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யதடை கோரி உயா் நீதிமன்றத்தில் மனு

 அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:08 pm

DIN

 அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக உறுப்பினா்களான ராம்குமாா் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களில், ‘அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே, பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற அதிமுக உள்கட்சித் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட புதிய நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

இதுதொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை நடத்த தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளின்படி நிா்வாகரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களான பொதுக்குழு, செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்றக் குழு அமைத்தல் மற்றும் உள்கட்சி தோ்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும். கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினா்களை நீக்கவும், புதிதாக கட்சிப் பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.