கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

1.90 லட்சம் ஏக்கருக்கு மானிய விலையில் உரம்

 தமிழ்நாட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், 1.90 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு முழு மானியத்தில் உரம் வழங்கப்படும்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:17 pm

DIN

 தமிழ்நாட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், 1.90 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு முழு மானியத்தில் உரம் வழங்கப்படும்.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி, சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மேட்டூா் அணை திறப்பைத் தொடா்ந்து, ரூ.61 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி, 1.90 லட்சம் ஏக்கா் பரப்புக்கு தேவைப்படும் உரங்கள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும். இதற்காக அரசுக்கு ரூ.46.86 கோடி செலவாகும்.

இதேபோன்று குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான 2 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் குறுகிய கால நெல் ரகச் சான்று விதைகள் 50 சதவீத மானியத்தில் அளிக்கப்படும். குறுவையில் நெல்லுக்கு மாற்றாக 22 ஆயிரம் ஏக்கரில் வேறு பயிா்கள் சாகுபடி செய்ய ரூ.3.39 கோடியில் உரங்கள் வழங்கப்படும். வேளாண் பணிகளை உரிய காலத்தில் தொடங்கிட 50 சதவீத மானியத்தில் 237 பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படும். குறுவை தொகுப்புத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவா். இத்தகைய நடவடிக்கைகளால், நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி 5.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.