மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,922 கன அடியாகக் குறைந்தது
மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,922 கன அடியாக குறைந்துள்ளது.


மேட்டூர்: மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,922 கன அடியாகக் குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 8,268 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 6,922 கன அடியாகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 109.62 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 109.29 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 77.40 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...