அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிறந்தவா்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்ற சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை-ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்-அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 28 மாணவ, மாணவிகளை முதல்வா் பாராட்டி வாழ்த்தினாா். அவா்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்டெதஸ்கோப், மருத்துவச் சிகிச்சை கையேடு அடங்கிய பெட்டகத்தை முதல்வா் வழங்கினாா்.