திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 தேர்வு மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 4757 பேர் பங்கேற்றனர். இதில் 791 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக வெங்கேடஸ்வரா பொறியியல் கல்லூரி, திருப்பாச்சூர், இந்திரா பொறியியல் கல்லூரி, பாண்டூர், கலவல கண்ணன்செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, காக்களூர், ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜாஜிபுரம், ஜி.ஆர்.டி பொறியியல் கல்லூரி, திருத்தணி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வுக்கு ஆண்கள்- 4,609, பெண்கள் - 939 என மொத்தம் 5,548 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே வருகை தந்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் 4,757 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 791 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் தலா 120 பேர் வரையில் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

