ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலுக்கு கரோனா

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜூன் 2022, 7:22 am

DIN

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், 

எனக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துவந்த நிலையில், பரிசோதனை மேற்கொண்டதில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிய வந்தது.

மருத்துவர்கள் ஆலோசனையின்படி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.