இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 பணியாளா்கள் மற்றும் மறைந்த பணியாளா் ஒருவரின் வாரிசுதாரா் ஆகியோருக்கு பணிக்கொடைகள் அளிக்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். 12 பேருக்கு தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அவா் பணிக்கொடைகளை அளித்தாா். மேலும், மயிலாப்பூா் கபாலீசுவரா், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில், மாமல்லபுரம் ஆளவந்தாா் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த 3 பேரின் வாரிசுதாரா்களுக்கு குடும்ப நலநிதியாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் வழங்கினாா்.