புறா எச்சத்தால் தொற்று பாதிப்பு ஏற்படுமா?

மீனாவின் கணவருக்கு, புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. புறா எச்சத்தால் தொற்று ஏற்படுமா என்றால், ஆம் என்கிறது அறிவியல்.
புறாக்கள் (கோப்புப் படம்)
புறாக்கள் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

நடிகை மீனாவின் கணவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு புறாவின் எச்சம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், புறாக்களின் எச்சத்தால் தொற்று ஏற்படலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் எஸ். தினகரன் தெரிவித்துள்ளார். 

நடிகை மீனாவின் கணவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.

தற்போது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று நுரையீரல் கிடைக்காததால், தொடர் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செவ்வாய்க் கிழமை) உயிரிழந்தார்.

இந்நிலையில் மீனாவின் கணவருக்கு, புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

புறா எச்சத்தால் தொற்று ஏற்படுமா? 

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் எஸ். தினகரன் குறிப்பிட்டதாவது,

''புறா எச்சத்தால் தொற்று ஏற்படுமா என்றால், ஆம் என்கிறது அறிவியல். புறா பட்டுமல்ல வௌவால்களின் எச்சத்திலும் ஹிஸ்டோப்பிளாஸ்மா கேப்சுலாட்டம் (Histoplasma capsulatum) என்ற பூஞ்சைகள் இருக்கலாம். இவற்றின் ஸ்கோர்கள் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.

மாடப்புறாக்கள் உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். இம்மாதிரியான அடுக்ககங்களில் குளிர்சாதனப் பெட்டி (ஏசி) வெளிப்புற கட்டமைப்பில், சிறு, சிறு இடங்களில் புறாக்கள் வசிக்கின்றன. இதன் எச்சங்கள் காய்ந்த பிறகு பொடியாகி மென்ற தூசிகள் காற்றில் கலக்கும் வாய்ப்புள்ளது. 

ஏசிக்கா, பூட்டப்பட்டறைகளில், காற்றோட்டமில்லாத அறைகளில், சற்று ஈரப்பதம் கொண்ட அறைகளில் இப்பூஞ்சைகள் வாசம் செய்ய வாய்ப்புகள் அதிகம். இவை ஏற்படுத்தும் தொற்று தான் ஹிஸ்டோப்ளாஸ்மாசிஸ் (Histoplasmosis). இதனால் நுரையீரல் பாதிப்படைய வாய்ப்புண்டு. 

நுரையீரல் பாதிப்பு

மீனாவின் கணவர் முன்பு வசித்த பெங்களூரு இல்லத்தில் இருக்கும் போதே இந்த தொற்றால் அவதிப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உறுப்பு மாற்று குறித்தும் கூட ஆலோசிக்கப்பட்டது. 

மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து மட்டுமே உறுப்பு கிடைப்பது சாத்தியம். இதனிடையே கரோனா தொற்றும் சேர்ந்து கொண்டதால் நுரையீரல் செல்கள் மிகுந்த சேதமுற்றது காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார்கள்.

பொதுவாக இந்த பூஞ்சை சிறிய அளவில் தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், புற்றுநோய் சிகிச்சையாக கீமோ எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்திக்குறைபாடு கொண்டவர்கள் மோசமாக பாதிக்கப்படுவர். கோழிப் பண்ணைகளில் வேலை செய்பவர்கள், மண்ணோடு அதிகமாக புழங்குபவர்களையும் இந்நோய் தாக்கக்கூடும். கவனம் தேவை! என எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com