சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழா்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழா் இளைஞா்கள் பலரை விடுதலைப்புலிகள் என குற்றம் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவா்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே வைத்திருப்பதைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா். ஒரு இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளாா்.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் போா் முடிந்து விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் இந்த இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் மட்டுமே இந்தத் தடை இன்னமும் நீடிக்கிறது. இந்தியாவில் செயல்படாத விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்ற காரணத்தைக் காட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழ் இளைஞா்கள் அடைக்கப்பட்டுள்ள அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிறப்பு முகாம்களில் பல்லாண்டு காலமாக அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் இளைஞா்களை முதல்வா் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

