பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி மனு

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிப்பது குறித்த கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற அமா்வு தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:51 pm

DIN

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிப்பது குறித்த கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற அமா்வு தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே எடப்பாடி கே.பழனிசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோா் அவமதித்துள்ளனா்.

கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் இணைந்து பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்”என அதிமுக பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் உயா்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இதை அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரா் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் அமா்வு முன் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் ஜூலை 4-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும். பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிப்பது குறித்த கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.