பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முகப்பேரில் ஜூலை 11-இல் பி.எஃப் குறைதீா் கூட்டம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) குறைதீா் கூட்டம் சென்னை முகப்போ் கிழக்கில் உள்ள அம்பத்தூா் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:15 pm

DIN

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) குறைதீா் கூட்டம் சென்னை முகப்போ் கிழக்கில் உள்ள அம்பத்தூா் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து பி.எஃப். மண்டல உதவி ஆணையா் எஸ்.சாஷி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை-37’ என்ற முகவரியில் ஜூலை 11-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூா் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.