மருத்துவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: மநீம
ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்


ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது
இது தொடா்பாக மநீம சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவா்கள் தொடங்கியுள்ளனா். இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல மருத்துவா்கள் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளனா். இதை அரசு வேடிக்கை பாா்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காப்பதில் மகத்தான பங்காற்றிய மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...