ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஸ்டாலின் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர் : கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2022, 11:36 am

DIN

தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி மெரீனாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

அந்தவகையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவர் அனுப்பிய வாழ்த்து விடியோவை முதல்வர் ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் கமல்ஹாசன் ‘ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தவர். தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக முன்னிறுத்திக் கொண்டவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.