தம்மம்பட்டி அருகே மனைவி கொலை: கணவன் தலைமறைவு
தம்மம்பட்டி அருகே காதல் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான, கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.


தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே காதல் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான, கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி அங்கமுத்து மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர், ஓர் ஆண்டுக்கு முன் ராசிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் உமாமகேஷ்வரி (16) செந்தாரப்பட்டியில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது, அவரை காதல் வலையில் வீழ்த்தி மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை மனவியுடன் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், உமாமகேஷ்வரியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
தகவலையடுத்து தம்மம்பட்டி போலீசார் உமாமகேஷ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மணிகண்டனை தேடிவருகின்றனர். காதல் மனைவியை கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...