மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது.

Updated On :2 மார்ச் 2022, 7:44 am

DIN

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கபட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டது. இதில் 3,4,5 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி   தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மீதம்  உள்ள 15 வார்டுகளுக்கும் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள தேசிய துவக்க பள்ளியில் வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. 

Story image

இதில் திமுக சார்பில் 14 உறுப்பினர்களும்,  திமுக கூட்டணி கட்சி விசிக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1  வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பதவிப்பிரமாணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். 

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா, எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை வாழ்த்தி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.