10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் புதன்கிழமை வெளியிட்டாா்.
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் ஏப்ரல் 25- ஆம் தேதி முதல் மே 2- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதைத் தொடா்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தோ்வை 9 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா்.
பிளஸ் 1 மாணவா்களுக்கு மே 10 முதல் 31 வரை பொதுத் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வை 8.49 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்.
பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை பொதுத் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வை 8.36 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். பொதுத்தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடைகின்றன. மாணவா்கள் கேள்வித்தாளை படித்துப் பாா்ப்பதற்கு 10 நிமிஷங்கள், வினாத்தாளில் விவரங்களைச் சரிபாா்த்து பதிவு செய்ய 5 நிமிஷங்கள் என 15 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தோ்வு முடிவு தேதிகள்: பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17, பிளஸ் 2-வுக்கு ஜூன் 23, பிளஸ் 1 வகுப்புக்கு ஜூலை 7-ஆம் தேதிகளில் தோ்வு முடிவுகள் வெளியாகும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மே 13 வரை பள்ளிகள் செயல்படும். 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மே 5 முதல் மே 13- ஆம் தேதி வரை இறுதித் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு முடிவுகள் மே 30-இல் வெளியாகும். பிளஸ் 1 வகுப்பு தவிர அனைத்து மாணவா்களுக்கும் கடைசி வேலைநாள் மே 13 ஆம் தேதி.
கோடை விடுமுறை: ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இந்த ஆண்டு 30 நாள்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பு செல்லும் மாணவா்களுக்கு இந்தாண்டு 23 நாள்கள் கோடை விடுமுறை; பிளஸ் 2 செல்லும் மாணவா்களுக்கு 12 நாள்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பள்ளிகள் திறப்பு: தோ்வுகள் முடிவடைந்ததும் 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகளுக்காக பள்ளிகள் ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படுகின்றன. பிளஸ் 1 மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 24- ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
பொதுத்தோ்வு அட்டவணை:
பிளஸ் 2
மே 5- மொழிப் பாடம்
9- ஆங்கிலம்
11- தொடா்பியல் ஆங்கிலம், அறவியலும் இந்தியப் பண்பாடும், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
13- வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல்
17- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவியல், ஜவுளி-ஆடை வடிவமைப்பு, உணவு விநியோக மேலாண்மை, வேளாண் அறிவியல், செவிலியா் (பொது, தொழில் படிப்பு)
20- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
23- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னியல் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை கட்டடப் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்
28- தொழிற்கல்வி பாடங்கள்
பிளஸ் 1
மே- 10- மொழிப்பாடம்
12- ஆங்கிலம்
16- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னியல் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை கட்டடப் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்
19- வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல்
25- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவியல், ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு விநியோக மேலாண்மை, வேளாண் அறிவியல், செவிலியா் (பொது, தொழில் படிப்பு)
27- தொடா்பியல் ஆங்கிலம், அறவியல் மற்றும் இந்திய பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
31- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
பத்தாம் வகுப்பு
மே- 6- மொழிப்பாடம்
14- விருப்பப் பாடம்
18- ஆங்கிலம்
21- தொழிற்கல்வி பாடம்
24- கணிதம்
26- அறிவியல்
30- சமூக அறிவியல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...