வாழப்பாடி பேரூராட்சி தலைவராக கவிதா போட்டியின்றி தேர்வு
சேலம், வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தியின் மனைவி ச.கவிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சேலம், வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தியின் மனைவி ச.கவிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழப்பாடி பேரூராட்சி மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக-7 அதிமுக-5 பாமக-2, சுயேட்சை-1 வார்டுகளில் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தி மனைவி ச.கவிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக, பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், திமுக சார்பில் வேட்புமனு செய்த ச.கவிதா போட்டியின்றி, வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...