
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி தலைவராக திமுக நகர திமுக பொறுப்பாளர் சு.பாலமுருகனின் தாயார் லோகாம்பாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு கெங்கவல்லி பேரூராட்சி செயல் அலுவலர் ராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக பொறுப்பேற்ற சு.லோகம்பாளுக்கு நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் தனது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் கவிதா, லதா, தங்கபாண்டியன், கலியம்மாள், ஹம்சவர்தினி, சையது, மருதம்பாள், வஹிதா பானு, அமுதா, சத்யா, முருகேசன், அருண்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அதனையடுத்து லோகாம்பாள் கெங்கவல்லியில் உள்ள அண்ணா சிலை, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.