பேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக-திமுக மோதல்

பேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக-திமுக மோதல்

பேளூர் முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தேர்வு தேர்தலில் திமுக-அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தேர்வு தேர்தலில் திமுக-அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக தலா 6 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இன்று காலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில்  திமுக சார்பில் ஜெயசெல்வியும், அதிமுக சார்பில் பரமேஸ்வரியும் பதவிக்குப் போட்டியிட்டனர். அப்போது அதிமுக-திமுக கவுன்சிலர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்ததால் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி ராமு அறிவித்தார்.  

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸார், கூடியிருந்த இரு தரப்பினர் மற்றும் தொண்டர்களையும் அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com