மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நீடாமங்கலம் பேரூராட்சி தலைவராக ராம்ராஜ் வெற்றி: அதிமுகவினர் சாலை மறியல்

நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 

News image
நீடாமங்கலத்தில் அதிமுகவினர் நடத்திய சாலை மறியல்.
Updated On :4 மார்ச் 2022, 12:42 pm

DIN

நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 

தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகர் தேர்தலை நடத்தினார். தலைவர் பதவிக்காக திமுக 8 வது வார்டு உறுப்பினர் ராம்ராஜ், 9-வது வார்டு அதிமுக உறுப்பினர் பரிமளா  செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

நீடாமங்கலம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ராம்ராஜ்.

நீடாமங்கலம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ராம்ராஜ்.

உறுப்பினர்களுக்கு வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினர்களாக வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ராம்ராஜ்  8  வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். தேர்தல் அதிகாரியின் இந்த முடிவு சரியல்ல. 3 வாக்குகள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பரிமளா செந்தமிழ்ச்செல்வன் வாதிட்டார். இதனைத் தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் தேர்தல் முடிவைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காலை 11 மணி முதல் சாலை மறியல் நடந்ததால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தினர். காலை 11.40 மணிக்கு சாலைமறியல் கைவிடப்பட்டது. காலை 9.30 மணியளவில் நடைபெறுவதாக இருந்த தேர்தல் உறுப்பினர்கள் வருகை காரணமாக காலை 10.10 மணிக்கு மேல் தொடங்கியது.

நீடாமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 7 பேர் திமுக, 7 பேர் அதிமுக ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.