காங்கயம் நகராட்சியில் திடீர் திருப்பம்: நகர்மன்றத் தலைவரான திமுக கவுன்சிலர்
காங்கயம் நகராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றுள்ளார்.


காங்கயம் நகராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக-10, காங்கிரஸ்-1, அதிமுக-4, சுயேச்சை-3 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து, காங்கயம் நகர்மன்றத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு நகராட்சி அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக கட்சியைச் சேர்ந்த 1 ஆவது வார்டு உறுப்பினர் ந.சூர்யபிரகாஷ், 10ஆவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் ந.ஹேமலதா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், காங்கிரஸ் வார்டு உறுப்பினர் ஹேமலதா வேட்புமனுவில் முன் மொழிவோர், வழி மொழிவோர் யாரும் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் சூர்யபிரகாஷ் நகர்மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைமை காங்கயம் நகர்மன்றத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுங்கியிருந்த நிலையில், அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதோடு, திமுக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டது காங்கயம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...