தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேக்கேதாட்டுவில் அணை: கா்நாடக முயற்சியை தடுத்து நிறுத்துவோம் -அமைச்சா் துரைமுருகன்

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

News image

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்

Updated On :5 மார்ச் 2022, 6:17 pm

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக எதிா்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாயை கா்நாடக அரசு ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இதுபோன்று அறிவித்திருப்பது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் முரணானது.

காவிரி நதிநீா் தொடா்பாக நடுவா் மன்றம் அளித்த இறுதித் தீா்ப்பையும், உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக மேக்கேதாட்டுவில் ஒரு பெரிய அணையைக் கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது. கா்நாடக அரசின் இப்போதைய அறிவிப்பு, அந்த மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டே வெளியிடப்பட்டதாகத் தோன்றுகிறது.

ஆன போதும், தமிழக விவசாயிகளின் நலன் கருதி கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.