ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான (‘டெட்’) விண்ணப்பப் பதிவு இணைய வழியில் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேருவதற்கு, ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதித் தேர்வில் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தேர்வில் இரண்டாம் தாளிலும், தேர்ச்சி பெற வேண்டும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை இரவு முதல் இணைய வழியில் தொடங்கியுள்ளது. தகுதியுடையவா்கள் www.trb.tn.nic.in என்ற ஆசிரியா் வாரிய இணையதள முகவரியில் வரும் ஏப்.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 14-ஆம் தேதி முதல் இணையவழியில் சமா்ப்பிக்கலாம்.
தகுதித் தேர்வுக்கான இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோா் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியா் தகுதித் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். தேர்வுகள் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜய் கட்சி தொடங்கியுள்ளாா்: தொல்.திருமாவளவன்

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


