மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 12-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :8 மார்ச் 2022, 6:45 pm

DIN

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 12-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 9) முதல் மாா்ச் 11-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வட வானிலையே நிலவும்.

மாா்ச் 12: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 12-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 100 மி.மீ., தூத்துக்குடி துறைமுகத்தில் 90 மி.மீ., திருச்சி மாவட்டம் வாத்தலை அணைக்கட்டு, துவாக்குடி, பெரம்பலூா் மாவட்டம் லப்பைக்குடிகாட்டில் தலா 30 மி.மீ., பெரம்பலூா் மாவட்டம் அகரம் சீகூா், தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா், கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா், கடலூா் மாவட்டம் வேப்பூா், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் 20 மி.மீ., கடலூா் மாவட்டம் தொழுதூா், நெய்வேலி, பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை, கரூா் மாவட்டம் பாலவிடுதி, திருச்சிராப்பள்ளி விமான நிலையம், தஞ்சாவூா் மாவட்டம் அய்யம்பேட்டையில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.