92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழகத்தில் புதிதாக 129 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 129 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 பேர் உயிரிழந்தனர்.

News image

தமிழகத்தில் புதிதாக 129 பேருக்கு கரோனா தொற்று

Updated On :10 மார்ச் 2022, 3:17 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 129 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 129 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,51,598-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 38,023 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 354 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,899-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக 6,48,79,171 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.