காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பளுதூக்கும் போட்டி: சிறப்பிடம் பெற்ற அருப்புக்கோட்டை பள்ளி மாணவிக்குப் பாராட்டு

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார். 

News image
Updated On :10 மார்ச் 2022, 11:59 am

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார். 

விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டி இறுதிப் போட்டிகள்  விருதுநகர் செந்தில்குமார் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், தனது வயதுப்பிரிவில் முதல்பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

அம்மாணவி வி.தாமரை புஷ்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தங்கரதி மற்றும் உறவின் முறைப் பெரியோர்களும், பள்ளியின் பிற ஆசிரியப் பெருமக்களும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.